For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்” - அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்!

01:03 PM Jan 03, 2025 IST | Web Editor
“உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும்”   அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்
Advertisement

வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துள்ளார். 

Advertisement

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். கிட்டதட்ட 4 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சோதனை என அமலாக்கத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காட்பாடியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடுவே சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு 2 வழக்கறிஞர்கள் வருகை தந்தனர். இரண்டு வழக்கறிஞர்களும் அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடம் வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு பின்னர், அமைச்சர் துரைமுருகன் அவரது இல்லத்திலிருந்து கிளம்பினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும். யார் வந்திருக்காங்க என்று தெரியவில்லை. யாரும் வீட்டில் இல்லை. வீட்டில் வேலையாட்கள் மட்டுமே உள்ளனர். வந்திருக்கிற அதிகாரிகள் யார் என்று, என்ன வழக்கு என்றும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்த பிறகு நான் கருத்து கூறுகிறேன்” என தெரிவித்தார்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement