Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு உரிய நிதியை விரைவில் விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
08:17 PM Aug 19, 2025 IST | Web Editor
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு உரிய நிதியை விரைவில் விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய அமைச்சரின் அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோர்  சந்தித்தனர்.

Advertisement

அப்போது அவர்கள்  தமிழ்நாட்டிற்கான ஊரக உட்கட்டமைப்பு மற்றும் குளச்சல் துறைமுக மேம்பாட்டிற்கான நபார்டு (NABARD) வங்கியின் நிதியுதவியினை விரைவில் விடுவிக்கக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தைஅளித்தனர்.இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்ச மு.க.ஸ்டாலின்,

”குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
#financeministerCMStalinlatestNewsNirmalaseetharamanTNnews
Advertisement
Next Article