Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை" - வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேச்சு!

07:08 AM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

"கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை" என வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேசியுள்ளார்.

Advertisement

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை (29.06.2024) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் நேற்று மதியம் முதலே குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியாவை விமர்சனம் செய்த ரசிகர்கள் இன்று வான்கடே மைதானத்தில் ஹார்திக்…ஹார்திக்… என்று கோஷம் எழுப்பினர்.

இந்திய அணி வீரர்களுடன் மும்பை வந்த விமானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய அணி வீரர்கள் பேருந்து மூலம் மும்பை வான்கடே மைதானத்துக்கு வந்தனர். அப்போது, வழியெங்கும் குறிப்பாக மும்பை கடற்கரைச் சாலையில் பல லட்சக்கணக்கான ரசிகர் குவிந்ததால் வாகனங்கள் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தன.

இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்ததாவது..

“ கடந்த 15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா இப்படி உணர்ச்சிவசப்பட்டு இப்போதுதான் பார்க்கிறேன். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.
பும்ரா அடுத்த தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்த வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று உலகக் கோப்பையை வென்று பாராட்டு விழாவிற்கா எத்தகைய பிரம்மாண்டத்தை  பார்க்கிறனோ, அதை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

சச்சின் டெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்தினார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. தற்போது நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது தருணம் வேறெதுவும் இருக்க முடியாது என்று நம்புகிறேன்” என விராட் கோலி தெரிவித்தார்.

Tags :
Celebrationind vs saIND vs SA FinalRohit sharmaT20 World CupVirat Kholi
Advertisement
Next Article