Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கதேச அணி போல் மோசமான ஒரு எதிரணியை பார்த்ததே இல்லை -இலங்கை வீரர் மேத்யூஸ் ஆதங்கம்...

01:15 PM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

எனது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு மோசமாக ஒரு எதிரணி நடந்து கொண்டதை நான் பார்த்ததே இல்லை என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.  

Advertisement

உலகக்கோப்பையில் டெல்லியில் நடந்த இலங்கை Vs வங்கதேசம் போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸிற்கு ‘டைம் அவுட்’ முறையில் கொடுக்கப்பட்ட அவுட் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

பந்தையே எதிர்கொள்ளாமல் உள்ளே வந்தவுடனேயே ‘டைம் அவுட்’ விதிப்படி வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் அப்பீல் செய்ய அவுட்டாகி வெளியே சென்றதால் மேத்யூஸ் கடும் கோபம் கொண்டிருந்தார்.  ஒட்டுமொத்த இலங்கை அணியுமே அதிருப்தியில்தான் இருந்தது.

வங்கதேச அணி பேட்டிங் செய்த போது ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டையே மேத்யூஸ்தான் வீழ்த்தியிருந்தார்.  அப்போதே மணிக்கட்டை காட்டி டைம் என்ன என்பதை போல சைகையுடன் கொண்டாடி தன் கோபத்தை வெளிக்காட்டியிருந்தார்.  மேலும், வங்கதேச பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள கொஞ்சம் தாமதம் செய்தாலும் உடனே நடுவர்களிடம் வாக்குவாதத்திற்கும் சென்றிருந்தார் மேத்யூஸ்.  இறுதியில் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் நட்பாக கைகுலுக்கக் கூட இல்லை. மேத்யூஸின் அவுட் ஒருவித மோதலையே இரு அணிகளுக்கும் ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் தான் பத்திரிகையாளர்களை சந்தித்தாதர் மேத்யூஸ். இந்த சந்திப்பில் முழுவதும் அந்த அவுட் பற்றி மட்டுமே மேத்யூஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஆதங்கத்தோடு அவர் பேசியவை இங்கே...

‘நான் எந்த தவறும் செய்யவில்லை. பேட்ஸ்மேன் இரண்டு நிமிடத்திற்குள் க்ரீஸூக்குள் வர வேண்டும் என்பது விதி.  நானும் அதன்படி க்ரீஸூக்குள் வந்துவிட்டேன்.  ஆனால், திடீரென என்னுடைய ஹெல்மட்டில் பிரச்னை ஏற்பட்டது.  ஒரு வீரர் தன்னுடைய பொருட்களை தான் தான் சரியாக பராமரித்து ஆட்டத்திற்குள் வரும்போது எடுத்து வர வேண்டும் என்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், அந்த ஹெல்மட்டின் பட்டை திடீரென பிய்ந்துவிடும் என்பது எனக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? அது திடீரென நடந்த விபத்து.

சமரவிக்ரமா எப்போது அவுட் ஆனார், நான் எப்போது களத்திற்குள் சென்றேன், ஹெல்மட் எப்போது வந்தது இதற்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆனது என்பதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.  இதை வைத்து நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளில் இறங்குவோம்.  நடுவர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொண்டார்கள்.  ஆனாலும் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.  இந்த முடிவை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.  வங்கதேச கேப்டன் ஷகீப் அல் ஹசனுக்கும் நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தவில்லை என்பது தெரியும். அவரால் அந்த அப்பீலை வாபஸூம் வாங்கியிருக்க முடியும். ஆனாலும் அவர் அதை செய்யவில்லை.

போட்டியின் முடிவில் நாங்கள் அவர்களுக்கு கைகுலுக்கவில்லை என்பது பிரச்சனையாகியிருக்கிறது. நம்மை மதிப்பவர்களுக்கு மட்டும்தான் நாம் பதில் மரியாதை கொடுக்க முடியும். பிறரை மதிக்காமல் அடிப்படை அறிவின்றி செயல்படுபவர்கள் எங்களிடம் அதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது.’தன்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான ஒரு எதிரணியை நான் பார்த்ததே இல்லை என்று கோபத்தோடு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார் மேத்யூஸ்.

Tags :
Timedout | Controversy | ShakibAlHasan | Mathews
Advertisement
Next Article