For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எனக்கு ADHD குறைபாடு உள்ளது” - நடிகர் ஃபஹத் ஃபாசில் பகிர்வு!

05:24 PM May 28, 2024 IST | Web Editor
“எனக்கு adhd குறைபாடு உள்ளது”   நடிகர் ஃபஹத் ஃபாசில் பகிர்வு
Advertisement

நடிகர் ஃபஹத் ஃபாசில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisement

நடிகர் ஃபகத் ஃபாசில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது. இவர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் ’புஷ்பா2’ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். சினிமா வாழ்க்கை போல தனது தனிப்பட்ட பிரச்னை குறித்தும் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுபவர் ஃபஹத் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு.

இந்நிலையில், எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு வந்தார் நடிகர் ஃபஹத் பாசில். அப்போது மேடையில் பேசிய அவர்,

“எனக்கு மருத்துவ ரீதியாக ஏடிஹெச்டி என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அதற்கென்று தனி குணாதிசயங்கள் உண்டு. நான் மருத்துவரிடம் 41 வயதில் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர், சிறுவயதாக இருந்தால் இந்த நோயை உடனே குணப்படுத்தி விடலாம் என்றார்” எனப் பேசினார்.

ஃபஹத்தின் இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏடிஹெச்டி (ADHD): ‘Attention Deficit Hyperactivity Disorder’ என்பது மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பியல் குறைபாடு என மருத்துவர்களால் விளக்கப்படுகிறது. கவனச்சிதறல் குறைபாடு என்பது இதன் எளிய விளக்கம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கவனச் சிதறல் காரணமாக குறிப்பிட்ட வேலையை அதற்கு உண்டான காலத்துக்குள் முடிக்க முடியாமல் தவிப்பது உண்டு.

ஹைபர் ஆக்டிவாக இருப்பது, கவனச்சிதறல், உணர்ச்சிகளை அடக்க முடியாமை, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, அதிகமாக பேசிக்கொண்டேயிருப்பது உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன.

Tags :
Advertisement