For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தளபதி விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான்” - நடிகர் வைபவ்!

04:42 PM Feb 19, 2024 IST | Web Editor
“தளபதி விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான்”   நடிகர் வைபவ்
Advertisement

“தளபதி விஜய் அரசியல் வருவது நல்லது தான்”என நடிகர் வைபவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஷெரீப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'ரணம்'.  வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா,  தன்யா ஹோப்,  சரஸ் மேனன்,  சுரேஷ் சக்கரவர்த்தி,  பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.  பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.  சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

கிரைம் திரில்லர் படமாக 'ரணம்' உருவாகியுள்ளது.  இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.  இந்த டிரைலரை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.  இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில்,  செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய வைபவ் ,  “ ரணம் படத்தில் நடித்ததில் மிக மகிழ்ச்சி.  இந்த படம் ஒரு நல்ல மெசேஜை கூற வருகிறது.  தளபதி 68  படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.  அஜித்துடனும் நடித்து விட்டேன் விஜயுடனும் நடித்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது.

தனது 69 ஆவது படத்திற்குப் பிறகு நான் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியிருக்கிறார், அதற்கு முன்பாகவே நான் அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.  விஜய் அரசியலுக்கு வந்தது நல்லது தான். நிறையா எதிர்ப்புகள் இருந்தாலும், இதற்குப் பின் அனைவரும் வரவேற்பார்கள் என அவர் பேசினார்.

Advertisement