'நான் டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்...' - கமலா ஹாரிஸை ஆதரித்ததால் கோபமடைந்த #Trump!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பாப் இசை நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பாப் நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் டெய்லர் ஸ்விஃப்ட்டை வெறுக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையேயான விவாதம் செவ்வாய்க்கிழமை இரவு முடிவடைந்ததை அடுத்து, பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் சமீபத்தில் கமலா ஹாரிஸை ஆதரித்தார்.
இருப்பினும், அரசியல் விவகாரங்களில் ஸ்விஃப்ட் தனது கருத்தை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2018 இடைக்காலத் தேர்தலில் கூட, டென்னசியில் இருந்து குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர் மார்ஷா பிளாக்பர்னுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.
ஸ்விஃப்ட் சமூக ஊடகங்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அவர்களில் 10 மில்லியன் பேர் அவரது இன்ஸ்டாகிராம் இடுகைகளை தீவிரமாக பின் தொடர்கின்றனர். இதனால் டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் தேர்தலில் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கலாம் என நம்பப்படுகிறது.