For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது" - “காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்ட பின் விஜய் ஆண்டனி பேட்டி!

07:18 AM Jun 04, 2024 IST | Web Editor
 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது    “காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்ட பின் விஜய் ஆண்டனி பேட்டி
Advertisement

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது என “காலம் உள்ளவரை கலைஞர்”  கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற கண்காட்சியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இந்த நவீன கண்காட்சியை நடிகரும் இசையமைப்பாளரூமான விஜய் ஆண்டனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து, நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள் : எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை - வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது :

"அமைச்சரின் அழைப்பின் பெயரில் இந்த கண்காட்சிக்கு வந்தேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  வரலாற்றை படத்தொகுப்பாக பார்த்தேன். இந்த கண்காட்சியை பார்க்க வருபவர்கள் அனைவரும் கலைஞரின் 100 ஆண்டுகால வாழ்கை வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. அவருடைய உருவ சிலையை தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய  இளைஞர்கள் தெரிந்து
கொள்ள வேண்டும் என்றால் இந்த கண்காட்சியை வந்து பார்க்கலாம். "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement