For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நான் சினிமாவை விட்டு விலகவில்லை... தவறாக புரிந்து கொண்டனர்" - நடிகர் #VikrantMassey விளக்கம்

09:32 AM Dec 04, 2024 IST | Web Editor
 நான் சினிமாவை விட்டு விலகவில்லை    தவறாக புரிந்து கொண்டனர்    நடிகர்  vikrantmassey விளக்கம்
Advertisement

நான் சினிமாவில் இருந்து முழுமையாக விலகவில்லை, மக்கள் தவறாக புரிந்துகொண்டனர் என நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி விளக்கமளித்துள்ளார்.

Advertisement

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ராந்த் மாஸ்ஸி. கடந்த 2013-ம் ஆண்டு ரன்வீர் சிங், சோனாக்சி சின்ஹா நடிப்பில் வெளியான ‘லூட்டேரா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2017 இல் வெளியான ‘எ டெத் இன் தி கஞ்ச்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர், ‘ஜின்னி வெட்ஸ் சன்னி’, ‘ஹசீன் தில்ருபா’, ‘லவ் ஹாஸ்டல்’, 12th Fail உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்து.

இந்த நிலையில், விக்ராந்த் மாஸ்ஸி, சினிமாவை விட்டு விலகு​வதாக அவர் பதிவை மேற்​கோள்​காட்டி செய்தி வெளி​யானது. அந்த பதிவில், “கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். ஒரு அப்பாவாக, மகனாக மற்றும் ஒரு நடிகனாக வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 2025-ம் ஆண்டு, நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம். மீண்டும் நன்றி” என்று விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அவர் சினி​மாவை விட்டு விலக முடிவு செய்​துள்ள​தாக​வும் அவர் தனது முடிவை மாற்ற வேண்​டும் என்றும் திரை​யுல​கினரும், ரசிகர்​களும் கோரிக்கை வைத்​தனர். இந்த நிலை​யில், தான் நடிப்பை விட்டு விலக​வில்லை என்று விக்​ராந்த் மாஸ்ஸி தெரி​வித்​துள்ளார்.

இது குறித்து நடிகர் விக்​ராந்த் மாஸ்ஸி கூறியதாவது,

“நான் சினிமாவில் இருந்து முழுமையாக ஓய்வு பெறவில்லை. தற்காலிகமாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால், ஒரு நீண்ட இடைவெளி எடுக்கவுள்ளேன். எனது உடலையும், வீட்டையும் கவனிக்க முடிவெடித்திருக்கிறேன். மக்கள் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டனர்”என விளக்கமளித்துள்ளார்"

இவ்வாறு விக்​ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Advertisement