"சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்துக்கு செல்ல முடிவெடுத்தேன்" - 'TEENZ' படம் குறித்து பார்த்திபன் உருக்கம்!
‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்துக்கு சென்றுவிட முடிவெடுத்தேன் என அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் முதல் பாதி எதிர்பார்ப்புடனும், இரண்டாம் பாதி விறுவிறுப்புடனும் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து இயக்குநர் பார்த்திபன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
Friends
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா
நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான்… pic.twitter.com/XFUmjISkSF— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 14, 2024