For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கூட்டணி நெருக்கடியால்தான் ஆதவ் அர்ஜூனாவை திருமாவளவன் இடைநீக்கம் செய்தார்” - நடிகர் சௌந்தரராஜா!

06:13 PM Dec 11, 2024 IST | Web Editor
“கூட்டணி நெருக்கடியால்தான் ஆதவ் அர்ஜூனாவை திருமாவளவன் இடைநீக்கம் செய்தார்”   நடிகர் சௌந்தரராஜா
Advertisement

ஆதவ் அர்ஜூனாவை கூட்டணி நெருக்கடியால்தால் திருமாவளவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்ததாக நடிகர் சௌந்தரராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோயில். இக்கோயில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில், பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடிகர் சௌந்தரராஜா நட்டு வைத்தார். பின்னர் பாரதியார் உருவப் படத்திற்கு, குழந்தைகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

“‘மண்ணுக்கும், மக்களுக்கும்’ அறக்கட்டளை மூலம் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இந்த ஊரணி மூன்று தலைமுறைக்கு பின் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உள்ளோம். இன்று பாரதியார் பிறந்த தினத்தில், மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையுடன், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் இணைந்து நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளோம்.

ஆதவ் அர்ஜூனாவை கூட்டணி நெருக்கடியால் திருமாவளவன் இடைநீக்கம் செய்துள்ளார். நான் ஆதவ் அர்ஜூனாவை பாராட்டுகிறேன். அவர் உண்மையை தைரியமாக பேசியதற்கு பாராட்டுவேன். தமிழக வெற்றிக் கழகம் என சொன்னதில் இருந்து, பிப்ரவரி மாதம் முதல் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இதுநாள் வரை தம்பியாக இருந்தேன். ரசிகனாக இருந்தேன். இப்போது தொண்டனாக தினமும் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் மாற்றம் வேண்டும் என நினைக்கும் ஏராளமான இளைஞர்கள், ஏராளமான மக்கள், ஓட்டு போடாமல் இருந்தவர்கள் கூட இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க உள்ளனர். அந்த நம்பிக்கை உள்ளது. அதில் நானும் ஒருவன்.

உசிலம்பட்டி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, ஆளை விடுங்க. அந்த மாதிரி கிடையாது. விஜய்யை முதலமைச்சராக்க கடுமையாக உழைக்கலாம் என இருக்கிறேன். அதற்கு பின்னாடி வருவதை சாமி பார்த்துக் கொள்ளும். எங்கள் விஜய் பார்த்துக் கொள்வார்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement