"விதியால் அரசியலுக்கு வந்தேன்"- நியூயார்க்கில் பிரதமர் #Modi உரை!
நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விதியால் தான் அரசியலுக்கு வந்தேன் என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். பின்னர் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினர் மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, பிற தொழில் பணியாளர்களாக பங்களிப்பை அளித்து வருகிறீர்கள். அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டுக்கு என்னை அழைத்துள்ளார், அதிபர் ஜோ பைடனின் அன்பும் மரியாதையும் என்னை உருகச் செய்துள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்குமான கௌரவம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இது போன்ற அரசு நிர்வாகத்தை பார்த்த மக்கள், எனக்காக வாக்களித்து 3வது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : “கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu
60 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வழங்கியுள்ளனர். மூன்றாவது முறை ஆட்சியில், சாதிக்க வேண்டிய லட்சியக் குறிக்கோள்கள் உள்ளன. அதற்காக மும்மடங்கு ஆற்றலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். என்னுடைய வாழ்க்கையை நல்ல அரசு நிர்வாகத்துக்காகவும், செழிப்பான இந்தியாவை உருவாக்குவதற்காகவும் அர்ப்பணித்திருக்கிறேன். விதியால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ ஆவேன் என நினைத்துப் பார்த்ததேயில்லை”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.