இந்நிலையில், இன்று சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மக
ளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளதாக சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் கூறினார். மேலும்,நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை, நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். சட்டமன்றத் தேர்தலில் நான் உறுதியாக போட்டியிடுவேன். நரேந்திர மோடி பிரதமர் ஆவதை தடுக்கக் கூடிய வலிமை எங்களிடம் இல்லை என சீமான் கூறினார்.