Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான்; ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி!” - மன்சூர் அலிகான் பேட்டி!!

05:41 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

நான் நடிகனே இல்லை, உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான் ஒன்று அண்ணாமலை
மற்றொன்று மோடி என்று  நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மன்சூர் அலிகான்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சரக்கு படத்தை எடுத்தேன், சென்சாரில் நிறைய கட்டுப்பாடுகளை சொல்கிறார்கள்.  படத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறேன். சென்சாரில் அத்வானி,  அம்பானி பெயர்கள் வரக்கூடாது என்று அதிக கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் மனிதப்பிறவியாக தெரியவில்லை. சங்கரய்யா நல்ல மனிதர். அவர் 102 வயது விடுதலைப் போராட்ட போராளி. அவருக்கு பொன்னாடை போர்த்தி காலில் விழுந்து ஆசி வாங்கினால் ஆளுநர் நல்ல மனிதர்.

இதையும் படியுங்கள்:டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

இந்தியா முழுவதும் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.  அனைத்து துறைகளிலும் எந்தெந்த பிரிவுகளில் மக்கள் இருக்கிறார்களோ விகிதாசாரப்படி இடஒதுக்கீட்டை பகிர்ந்து அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு முன்பே பீகாரில் இதை நிறைவேற்றி உள்ளார்கள்.  ரூ.300 கோடி இருந்தால் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக வைத்து 1.5 மாதத்தில் தமிழ்நாட்டில் இதை நிறைவேற்றலாம்.  அதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்று பல விஷயங்கள் நடக்கிறது.  ஏன் இப்படி
செய்கிறார்கள்? அண்ணாமலை ஐபிஎஸ் படித்தவர்.  அரசியலுக்கு வந்திருக்கிறார்.
எதற்காக குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும்.  மோடி வருடத்துக்கு 2 கோடி பேருக்கு
வேலைவாய்ப்பு தருவதாக சொன்னார்.  எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது?  எங்கே கிடைத்தது?  வடஇந்திய தொழிலாளர்களுக்கு நாம் தான் இங்கு வேலை கொடுக்கிறோம். அடுத்து வரும் தேர்தலில் மக்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கே போட்டியிட இருக்கிறேன்,  நிச்சயம் தனித்து போட்டியிட மாட்டேன்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.  ஐபிஎஸ் ஆக இருத்த போது பதவி பிரமாணம் எடுத்திருப்பார் தானே! எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள்?  பாஜகவில் மட்டும் தான் ரவுடிகள் இருக்கிறார்களா? மற்ற கட்சியில் இல்லையா? எல்லாத்துலயும் இருக்காங்க.

மோடியை ஏழை தாயின் மகன் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரது உடை, கண்ணாடி என எல்லாமே ரொம்ப காஸ்ட்லியாka அணிகிறார்.  அதானி யாரு? எதற்காக எல்லாவற்றையும் கார்ப்பரேட் கிட்ட கொடுக்குறீங்க?  ஏர்போர்ட், கப்பல் என எல்லாமே அதானி கிட்ட தான்.  இதே அதானி,  வெளிநாட்டில் இருந்து பல வளங்களை சட்டவிரோதமாக கொண்டு வரலாமே? எதற்காக தனியாரிடம் தூக்கி கொடுக்க
வேண்டும்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில்,  தமிழ்நாடு அரசு சிறைவாசிகளை விடுதலை செய்திருக்க வேண்டும்.  நீட்டையும் ரத்து செய்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணிக்கு நான் எனது ஆதரவை தருவேன்.  மத்தியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச்சு பற்றிய கேள்விக்கு,  பதில் அளித்த மன்சூர் அலிகான், இதெல்லாம் அடிக்கடி பல இடங்களில் நடக்கிறது. ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.  இதை தவறு என்று தான் பார்க்கிறேன். அதைபோல சென்னையில் 650 ஏக்கர் அளவில் பெரிய கட்டடமாக ராஜ் பவன் இருக்கிறது. மத்திய அரசை வேண்டிக்கொள்கிறேன். ராஜ் பவனுக்கு பல்வேறு முக்கியஸ்தர்கள் வருவார்கள். அதனால் பெரிதாக இருக்க வேண்டும் தான். ஆனால் இவ்வளவு ஏக்கர் தேவை இல்லை. அதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் வகையிலாக அந்த இடங்களை பயன்படுத்தலாம்.

பெரியார் சிலை அகற்றம் குறித்து அப்படி எளிதாக செய்து விட முடியாது.  திமுக
ஆட்சிக்கு வந்த பிறகு பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்வதாக சொன்னார்கள். ஆனால் தற்போது செய்யவில்லை.  நீட் ஒழிக்க வேண்டும்.  விலைவாசி உயர்வை குறைப்பது உள்ளிட்ட பலவற்றை செய்திருக்க வேண்டும்.

சனாதானத்தை பற்றி உதயநிதி சொன்னது வேறு.  அவர் இந்து மதத்துக்கு எதிராக
சொல்லவில்லை.  ஆண்டாண்டு காலமாக இருப்பதை தான் சொன்னார். உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.  இதை முதல்வரிடம் மனுவாக கொடுக்க இருக்கிறோம்.  நான் நடிகனே இல்லை. உலகத்தில்
இரண்டு நடிகர்கள் தான். ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் மோடி.

விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும்.  பிறகு எனது ஆதரவை தருவது பற்றி பேசலாம். அரசியலில் எந்த இயக்கம் என்னை வரவேற்குதோ,  மக்களுக்கு தேவையானதை கண்டுபிடித்து தேர்தலில் நிற்பேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Tags :
actorAnnamalaiChennaiinterviewMansoorAliKhanNarendramodinungambakkamPMOIndia
Advertisement
Next Article