Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘பார்வதியின் திறமையால் பிரமிப்பில் இருக்கிறேன்’ - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

03:12 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை பார்வதி திருவோத்துவின் நடிப்பை பாராட்டியுள்ளார். 

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன் ஆகியோர் நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் தங்கலான். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை பார்வதியின் நடிப்பை புகழ்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட்டுள்ளதாவது;

“கடந்த 2 நாள்களில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் திரைப்படத்தைப் பார்த்தேன். நடிகை பார்வதியின் திறமையைக் கண்டு பிரமிப்பில் இருக்கிறேன். முழுமையான திறமைசாலி. அன்புள்ள பார்வதி, நீங்கள் தங்கம். ஒவ்வொரு முறையும் திரையில் உங்களைப் பார்க்கும்போது நீங்கள் செய்ததை யாராலும் செய்ய முடியாது என்பதையே அறிகிறேன். நீங்களே சிறந்தவர்." எனப் பாராட்டியுள்ளார்.

பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி திருவோத்து. இதனையடுத்து மரியான் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

Tags :
Ishwarya LakshmiMalavika mohananParvathy Thiruvothuthangalaanvikram
Advertisement
Next Article