"நான் ஆண்டவனின் பாதி.." - வெளியானது ‘ஏஸ்’ படத்தின் செகண்ட் சிங்கிள்!
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மகாராஜா’ மற்றும் ’விடுதலை – 2’ ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து, அவர் இயக்குநர் மிஷ்கினின் ‘டிரெயின்’ படத்தில் நடித்து வருகிறார். இதறகிடையே, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : IPL 2025 | பெங்களூரு போட்டி இடமாற்றம்.. காரணம் என்ன?
இப்படத்திற்கு ‘ஏஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மணி வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
Second Single from #ACE - Ace Anthem is Out Now ❤🔥
▶️https://t.co/fO2JueoX4K
#ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir… pic.twitter.com/x3Fso2Cwq2— VijaySethupathi (@VijaySethuOffl) May 20, 2025
இப்படம் மே 23ம் வெளியாக உள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, ‘ஏஸ்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.