"நட்பு அடிப்படையில் டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளேன்" - அண்ணாமலை!
சென்னை மணலியில் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
" முதலமைச்சர் ஸ்டாலின் மண் குதிரை மேல் பயணம் செய்து வருகிறார். அவரை காப்பாற்றிக்கொள்ளவே முடியாத நிலை உள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பல மாநிலங்களில் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது, காங்கிரஸ் எத்தனை மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும், வயிற்று
எரிச்சலில் செல்வபெருந்தகை பேசி வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் உள்துறை அமைச்சரை சந்திக்கிறார் என அனைவருக்கும்
தெரியும். எல்லோருக்கும் தெரியும் நிலையில் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் வாபஸ் பெற்றதை கண்டிக்கிறோம். அதை செயல்படுத்த வேண்டும்.
விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் வந்தால் சந்தோசம். வரும் மக்கள் பொதுமக்கள்
சொத்துக்கு சேதம் அடையாமல் சென்றால் சந்தோஷம். எல்லா கட்சிக்கும் கேட்டவுடன் அனுமதி தருவதில்லை இதை எல்லாம் கடந்துதான் வளர வேண்டும் இந்த நெருக்கடிகளை கடந்தால்தான் கட்சியாக வளர முடியும் விஜய் கட்சி இதை எல்லாம் எதிர்த்தான் அரசியல் வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் என அமித்ஷா கூறியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும், ஒரு இரு நாட்களில் நட்பு அடிப்படையில் டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளேன். தமிழக நலனுக்காக முடிவை மாற்ற வேண்டும் என கூறவுள்ளேம்”
என தெரிவித்தார்.