"வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்" - வைகோ பேச்சு!
மதிமுகவின் விழுப்புரம் மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ, "மதிமுக அழிந்துவிட்டது என்று கூறுகிறவர்களுக்கு மத்தியில் பல துரோகங்களை பார்த்துள்ளோம். துரோகங்கள் தனக்கு புதியதல்ல, இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களோடு தொடர்பு கொண்டு மூன்றாண்டுகளில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வெளிநாடு செல்லும் பயணம் குறித்து தன்னிடம் கூறியது இல்லை. துரை வைகோ அரசியலுக்கு வர கூடாதென்று நான் கூறினேன். மதிமுக மாவட்ட செயலாளர்கள் அரசியலுக்கு வரட்டும் என தெரிவித்து வாக்களித்தார்கள். வாக்களித்தவர்கள் பழி சொல்லுக்கு ஆளாகவில்லை, அரசியலுக்கு துரை வைகோ வரகூடாதென்று கூறிய நான் இன்று வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.