For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நான் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன்” - நடிகர் அர்ஜூன் தாஸ்!

09:19 PM Dec 16, 2024 IST | Web Editor
“நான் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன்”   நடிகர் அர்ஜூன் தாஸ்
Advertisement

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹாலிவுட் மூவி லயன் கிங். லயன் கிங் படத்திற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.

வால்ட் டிஸ்னி தயாரிப்பில் முதன்முதலாக 1994ஆம் ஆண்டு “தி லயன் கிங்” அனிமேஷன் வடிவில் வெளியானது. இதையடுத்து டேரல் ரூனி இயக்கத்தில் “தி லயன் கிங் II – சிம்பாஸ் பிரைடு” 1998ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து 1994-ல் வெளியான ‘தி லயன் கிங்’(The Lion King) திரைப்படம் 2019ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது ‘முஃபாசா : தி லயன் கிங்’ படம். இப்படம் வரும் டிச.20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் நாசர், “நடிகனாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜ , அமிதாப் பச்சன், ராஜா இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால் இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் இதை பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளது. அதையும் நல்ல தரத்தில் இன்னும் மெருகூட்டி படமாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சிங்கம்புலி, “தி லயன் கிங்’ படத்தின் டப்பிங் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பரிசு. இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் எனக்கு டீமோன் கதாபாத்திரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

நடிகர் அர்ஜூன்தாஸ், “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நிறைய எமோஷன் இருக்கும். அதனால், மற்ற படங்களுக்கு டப்பிங் செய்வது போல அல்லாமல், கவனமாக செய்தேன். உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். நானும் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கான வட்டம் முழுமையாகி விட்டதாக நினைக்கிறேன்” என்றார்.

நடிகர் அசோக்செல்வன், “இதுபோன்று விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை. இந்த அனுபவம் புதியதாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்றார்.

நடிகர் ரோபோ ஷங்கர், “இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் நம்புகிறேன்” என தெரிவித்தார். நடிகர் விடிவி கணேஷ், “ரஃபிக்கின் இளைய வெர்ஷனுக்கு நான் குரல் கொடுத்திருக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்” என தெரிவித்தார்.

தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.

Tags :
Advertisement