Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன்” - நடிகை கனி குஸ்ருதி பேச்சு!

03:00 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன் என கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலஸ்தீன ஆதரவு கைப்பையுடன் கலந்து கொண்டு உலக நாடுகளின் கவனம் ஈர்த்த மலையாள நடிகை கனி குஸ்ருதி தெரிவித்துள்ளார். 

Advertisement

கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாவது உயரிய விருதான ‘கிரண்ட் பிரிக்ஸ்’ விருதை இந்திய திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ வென்றது.  இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை பெற்றார் இப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா.

ஹிந்தி மற்றும் மலையாள மொழியில் உருவான இத்திரைப்படம்,  கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப் பகுதியை எதிர்கொள்ளும் 2 செவிலியர்கள்,  அங்கு தங்களின் கனவை எவ்வாறு நனவாக்கிக் கொள்கின்றனர் என்பதை காட்டுகிறது.  இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த கனி குஸ்ருதி தனக்கு பணத் தேவை உள்ளதாக கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்  அவர் பேசியதாவது,

“நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் அளவு சிறியதோ அல்லது பெரியதோ எனக்கு கவலையில்லை. எ ல்லா கதாபாத்திரங்களும் எனக்கு முக்கியமானது. அது சுவாரசியமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.  அவ்வளவே. எனக்கு தேவையான படத்தினை நான் தேர்ந்தெடுக்கும் நிலைமையில் இல்லை.

தற்போது எனது முதல் நோக்கம் நான் பொருளாதாரரீதியாக தன்னிறைவு அடைய வேண்டும்.  படிப்படியாக நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். வருங்காலங்களில் நான் எனது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.

1970,80,90களில் மலையாள சினிமா தனது உச்சத்தில் இருந்தது. 1990- 2010 வரை சற்று பின் தங்கியது.  பின்னர் தற்போது மீண்டும் அதே நிலைமைக்கு வந்திருக்கிறது. மலையாள சினிமாவில் திறமையான நடிகர்,  நடிகைகள்,  இயக்குநர்கள்,  திரைக்கதை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.  இதை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

சமீபத்திய நேர்காணலில், “பிரியாணி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.  ஆனால், என்னிடம் பணம் இல்லை என இயக்குநரிடம் கூறியிருந்தேன்.  தனக்கு சுமார் 70,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன் . அது எனக்குப் பெரிய தொகை. எனது கணக்கில் அப்போது ரூ.3,000 மட்டுமே இருந்தது.  எனவே ரூ.70,000 கிடைத்தது நல்ல விஷயம் என நினைத்துக்கொண்டேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
All We Imagine As LightBiriyaniCannes Film FestivalGrand PrixKani Kusruti
Advertisement
Next Article