For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Hyderabad மேற்கு மாரேட்பள்ளியில் கட்டடங்களை HYDRAA இடித்ததாக பரவும் வீடியோ ? | FactCheck

11:38 AM Nov 30, 2024 IST | Web Editor
 hyderabad மேற்கு மாரேட்பள்ளியில் கட்டடங்களை hydraa இடித்ததாக பரவும் வீடியோ     factcheck
Advertisement

This news Fact Checked by ‘Newsmeter

Advertisement

ஹைதராபாத்தின் மேற்கு மாரேட்பள்ளியில் உள்ள மைசம்மா கோயிலுக்கு அருகில் கட்டிடங்களை ஹைட்ரா இடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதுகுறித்து உண்மைத்தன்மையை விரிவாக காணலாம்.

ஏரிகளில் புதிய கட்டுமானங்களை தடுப்பதிலும், தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளை சரிசெய்வதிலும் கவனம் செலுத்தும் என ஹைட்ரா நிறுவனத்தின் ஆணையர் ரங்கநாத் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்தார். ஹைட்ரா என்பது ஹைதராபாத் பேரிடர் மேலாண்மை மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் நிறுவனம் ஆகும். ஜூலை மாதத்திலிருந்தே HYDRAA முறையான விசாரணை மேற்கொள்ளாமல் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை இடிப்பதாகவும் , ஆக்கிரமிப்பு எனக்கூறி ஏழைகளின் வீடுகளை இடிப்பதாகவும் விமர்சனம் எழுந்து வந்தது.

இந்நிலையில், மேற்கு மாரேட்பள்ளியில் ஹைட்ரா சில இடங்களில் கட்டடங்களை இடித்ததாக செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் கூறுகின்றன. மைசம்மா கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் வீடியோக்களை x பயனர் ஒருவர் பகிர்ந்து “ஹைதராபாத் மேற்கு மாரெட்பல்லியில் உள்ள மைசம்மா கோயில் அருகே ஜேசிபி மூலம் இடிக்கும் பணியை ஹைட்ரா பணியாளர்கள் மேற்கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு செய்தி அறிக்கையில் "இடிப்பதற்கு முன் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக ஹைட்ரா அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்களைக் ஏற்படுத்தி தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான செய்திகள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. வெஸ்ட் மாரெட்பள்ளியில் இடிப்புகள் ஹைட்ராவால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் GHMC ஆல் செய்யப்பட்டது என்றும் நியூஸ் மீட்டர் கண்டறிந்துள்ளது. வைரலான பதிவில் உள்ள முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடலுக்கு உட்படுத்தியதில் , டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையின் X கணக்கில் பதிவிட்ட ஒரு வீடியோவைக் கண்டோம். அதில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை (நவம்பர் 23) அகற்றப்பட்டதைக் காட்டுகிறது. போலீசாரின் ஆதரவுடன் ஹைதராபாத் மாநகராட்சி ( GHMC ) நிர்வாகம் செகந்திராபாத்தில் உள்ள வெஸ்ட் மாரேட்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது" என்று தலைப்பில் அவை பகிரப்பட்டுள்ளது.

டெக்கான் க்ரானிக்கல், அதன் அறிக்கையில், GHMC மற்றும் செகந்திராபாத் கண்டோன்மென்ட் போர்டு (SCB) பணியாளர்கள் ஒரு கூட்டு நடவடிக்கையில் மூலம் மேற்கு மாரேட்பள்ளியில் நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதசாரிகளுக்கான வழியை அகற்றியதாக தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு மாரெட்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது ஹைட்ராதான் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. நியூஸ்மீட்டர், மேற்கு மாரேட்பல்லியில் உள்ள ஜிஹெச்எம்சியின் துணை நகரத் திட்ட அலுவலர் ஆர்.சுஸ்மிதாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த வீடியோ சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்பானது என தெரிவித்தார். நகர காவல்துறை, செகந்திராபாத் கண்டோன்மென்ட் போர்டு மற்றும் GHMC ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் உறுதிப்படுத்தினார். திட்ட அலுவலரான ஆர்.சுஸ்மிதா, பச்சை நிற உடையில், டெக்கான் க்ரோனிக்கல் வீடியோ மற்றும் வைரல் வீடியோவிலும் காணப்படுகிறார். இதன் மூலம் இரண்டு கிளிப்களும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகிறது. இரண்டு வீடியோக்களின் ஸ்கிரீன்ஷாட்களின் ஒப்பீடு இங்கே உள்ளது.

எனவே, ஆக்கிரமிப்புகளை இடித்தது ஹைட்ரா அல்ல பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம்தான் முடிவு செய்கிறோம்.

முடிவு :

மேற்கு மாரேட்பள்ளியில் உள்ள மைசம்மா கோயிலுக்கு அருகில் உள்ள கட்டிடங்களை ஹைட்ரா இடிப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்த கூற்று தவறானது. மேற்கு மாரேடப்பள்ளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை ஜி.எச்.எம்.சி மற்றும் எஸ்.சி.பி. ஆகியவை மேற்கொண்டன. ஹைட்ரா இதில் ஈடுபடவில்லை.

Note : This story was originally published by  ‘Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement