ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஹைதராபாத்!
இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18வது சீசன் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் சதம் விளாசினார். ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3, தீக்ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். தொடர்ந்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த ரன்கள் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை பெற்ற அணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஹைதராபாத் அணி எடுத்த 287 ரன்கள்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்
287/3 - 2024
286/6 - 2025
277/3 - 2024
272/7 - 2024
266/7 - 2024.