67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 267 இலக்கு என களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 வது லீக் போட்டியாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.
ட்ராவிஸ் ஹெட் வெறும் 16 பந்துகளில் பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, குல்தீப் யாதவின் பந்து வீச்சில் மார்க்ரம் விக்கெட்டை பறிகொடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் குல்தீப் யாதவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, அக்ஸர் படேல் பந்தில் கிளாசென் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 19 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 250 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் சமத் 13 ரன்களுக்கும், கம்மின்ஸ் 1 ரன்னுக்கும் அவுட்டாகினர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாபாஸ் அகமது 59 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 267 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணி, ஆரம்பத்திலேயே தடுமாறியது. தொடக்க வீரர்களாக இறங்கிய பிரித்வி ஷா 16 ரன்களிலும் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்து இறங்கிய ஜேக் பிரேசர் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் சற்று நம்பிக்கையூட்டும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேக் பிரேசர் 18 பந்துகளில் 65 ரன்களும், அபிஷேக் 22 ரன்களில் 45 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். தொடர்ந்து இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்கள், ரிஷப் பந்த் 44 ரன்கள், லலித் யாதவ் 7 ரன்கள், அக்சர் படேல் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழ 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த டெல்லி அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து 67 ரன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.