கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே கொல்கத்தா அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேற, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை இறுதி செய்யும், முதல் குவாலிஃபையர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தில் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து, அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை இரண்டாவது ஓவரில் வைபவ் வோரா பந்தில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 5வது ஓவரில் நிதிஷ் மற்றும் ஷாபாஸ் அகமது தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இம்பேக்ட் ப்ளேயர் சன்விர் சிங் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அப்துல் சமத் தனது விக்கெட்டினை 12 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து விளையாடியது. 19.3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் கேகேஆர் அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.