Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” - நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!

05:05 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

கணவர் 500 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்! போலீஸ் விசாரணை போதாது! சிபிசிஐடி தான் விசாரிக்க வேண்டும் என தஞ்சை பெண் ஒருவர் அளித்த திடுக்கிடும் புகார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்தோம்.  இந்நிலையில் எனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை வைத்திருந்தார்.

கணவர் விவேக்ராஜ் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள்
மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி சுமார் 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும்
வீடியோக்கள் எடுத்துள்ளார்.  இதைப் பற்றி தனது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம்
கூறிய போது அவர்கள் இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று என்னை
மிரட்டினர்.

மேலும் தன்னை இரண்டு மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவிலேயே கலைந்துவிட்டது.  இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்த வாய்ப்பில்லாததால் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்.  அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுகுமார குரூப் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,  இந்த மனு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
CBCIDcomplaintHigh courthusbandnews7 tamilNews7 Tamil UpdatesPoliceTamilNaduThanjavurwomen
Advertisement
Next Article