Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.2 கோடி சுருட்டிய கணவன், மனைவி!

பல இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கணவன், மனைவி கைது.
09:24 PM Aug 01, 2025 IST | Web Editor
பல இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கணவன், மனைவி கைது.
Advertisement

 

Advertisement

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கணவன், மனைவி ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (33), என்பவர் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரிடம், இவருடன் சேர்ந்து பல நபர்களிடம் அரசுத் துறைகளில் துணை வட்டாட்சியர் (Deputy Thasildar), SO, VAO, AE, Assistant மற்றும் OA போன்ற வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த E.M. பாபு என்கிற ஹமீத் உசேன் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோர் 2 கோடி ரூபாய் ($2,00,00,000/-) வரை பணம் பெற்றுள்ளனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் வாக்குறுதி அளித்தபடி அரசு வேலை வாங்கித் தராமல், போலியான அரசு முத்திரைகள் பதித்த பணி நியமன ஆணைகளைக் கொடுத்து இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடி குறித்துப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அருண் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மோசடிக்குப் பிறகு தலைமறைவாக இருந்த பாபு (40) மற்றும் அவரது மனைவி சந்தியா (36) ஆகிய இருவரையும் சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அருண் அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
ChennaiChennaiPolicecrimenewsgovtjobsJobScam
Advertisement
Next Article