Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செஞ்சி அருகே உயிரை மாய்த்துக்கொண்ட கணவன், மனைவி - போலீசார் தீவிர விசாரணை!

01:21 PM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

செஞ்சி அருகே திருமணம் தாண்டிய உறவால் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் குமார்(45).
இவரது முதல் மனைவி குமாரி என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட
நிலையில், திண்டிவனம் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த மகாராணி(35) என்பவரை
இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்
உள்ள நிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது மனைவி மகாராணி என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த
செந்தில் என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடயே
செந்திலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும் திருமணத்திற்கு பின்பு இருவரும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் குடும்பத்தில் பிரச்ணை ஏற்ப்படவே அவரது குடும்பத்தினர் குமார் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக பல முறை முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!

இந்நிலையில் நேற்று செந்தில் உறவினர்கள் குமார் குடும்பத்தினரிடம் இது குறித்து கேட்டபோது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டதாகவும் இதனை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று வீட்டு கதவை தட்டியபோது வீட்டு கதவை திறக்காததால் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன்-மனைவி இருவரும் மின்விசிறியில்
தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இருவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் அப்பகுதியில்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
husbandNews7Tamilnews7TamilUpdatesPoliceSuicideTamilNaduwife
Advertisement
Next Article