For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#HunterVantaar | வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு!

09:21 PM Sep 18, 2024 IST | Web Editor
 huntervantaar   வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு
Advertisement

வேட்டையன் திரைப்படத்தின் 2வது பாடலான 'ஹண்டர் வன்ட்டார்' என்ற பாடல் நாளை மறுநாள் (செப்.20) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தனர். இந்த சூழலில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை நேற்று முன்தினம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர்களில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இப்படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் 2வது பாடலான 'ஹண்டர் வன்ட்டார்' என்ற பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்பாடல் நாளை மறுநாள் (செப்.20) வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement