Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் மனித சங்கிலி போராட்டம் - திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்பு!

முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
06:43 PM Jun 19, 2025 IST | Web Editor
முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வேண்டும், முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் மதுரை ராஜா முத்தையா மன்றம் பகுதியில் இருந்து காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது

Advertisement

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் மக்கள் அதிகாரம் கழகம், தமிழ் புலிகள் கட்சி, திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட தமிழர் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தன.

மேலும் இதில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைக் சார்ந்த குழந்தைகள் ஒற்றுமையாக வருவது போல அழைத்து வரப்பட்டு மனித சங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் வருகிற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AmeerMaduraiMurugan Maanaduthirumavalavan
Advertisement
Next Article