For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த #KamalHaasan

08:27 PM Nov 01, 2024 IST | Web Editor
அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு   ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த  kamalhaasan
Advertisement

’நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்' எனும் எனது நம்பிக்கையை உறுதியாகி உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Advertisement

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து இப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது..

‘’ ரானுவ படையும் இந்திய நாட்டின் பெருமையும் எடுத்துரைக்கும் வகையில் வெளியான அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்த நாளில் இருந்து "சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும் சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும்.. அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்" என்று சொன்னேன், நாட்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்' எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தத் தேசத்திற்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் எய்தியவர், அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர். உயிர் நட்பைப் பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை. அவை படத்தில் குறிப்பிடப்படுள்ளது. அவரது அன்புக்குரியவர்கள் சித்திய கண்ணீருக்கும் , இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும் தான் இப்படம் திரையில் காட்சி படுத்தபட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு நிஜமான கதாபாத்திரமாக உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்தப் படத்திற்கான அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்குப் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்தத் தேசமே போற்றிய இரும்புப் பெண்மணி . அத்தனை இழப்புகளுக்கும் மத்தியில் நானொரு ராணுவ வீரனின் மனைவி எனும் பெருமிதத்தின் அடையாளமாக அவரது பாத்திரமாகவே மாறி இருக்கிறார் நடிகை சாய்பல்லவி.

தனது இசையினால் இந்தப் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் தனது முதல் படத்துக்குக் காட்டிய அக்கறையை, உழைப்பை ஒவ்வொரு படத்துக்கும் கடைபிடிக்கிறார். ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை திரைப்படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல, சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார் . தீவிரமும் உழைக்க வேண்டிய பொதுக்கனவு இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய சாய் எடிட்டர் கலை உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் அர்ப்பணிப்புடன் உழைத்து அமரன் எனும் பொதுக்கனவைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி. ” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

-முத்துமாரி

Tags :
Advertisement