Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?" - சீமான் கேள்வி!

03:20 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று (ஜூலை 7) இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

“அண்ணன் தம்பி போல் நாங்கள் இருவரும் ஒரே நோக்கத்தை கொண்டவர்கள். நாடாளுமன்ற தேர்தலில் கூட நாங்கள் சந்தித்து பேசியது உண்டு. அவருக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இந்தாண்டில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இவர் தலைவர் என்பதால் இவர் கொலை செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும்,132 பேர் யார் கொலை செய்யப்பட்டார்கள் என்று இதுவரைக்கும் தகவல் இல்லை.

மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? கொலை செய்தவர்களை கைது செய்து விட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் எதற்காக கைது செய்துள்ளார்கள் என்பதை கேட்டு உள்ளார்களா?. சிபிஐ விசாரணை கேட்பதில் எல்லாம் உடன்பாடு இல்லை.

இதையும் படியுங்கள் : “அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – கிருஷ்ணசாமி பேட்டி

சரணடைந்தவர்களை விசாரிக்க வேண்டும். ஆனால் அவர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டார்கள். தேர்தல் முடிந்தும் அவரிடம் துப்பாக்கி கொடுக்கப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை திருப்பி கேட்ட பொழுது அவர்கள் ஏன் கொடுக்கவில்லை. அவரிடம் துப்பாக்கி இல்லை என்பது அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும். இவ்வளவு செல்வாக்கு பெற்ற தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் நிலை? அவரை கைது செய்தார்களா? சரணடைந்தார்களா?"

இவ்வாறு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

Tags :
ArmstrongArmstrongbspBahujanSamajleaderBahujanSamajPartyBSPChennaiNTKSeeman
Advertisement
Next Article