For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோடை காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

01:15 PM Apr 29, 2024 IST | Web Editor
கோடை காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது  இதோ உங்களுக்கான சில டிப்ஸ்
Advertisement

கோடைகாலத்தில் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி இங்கு காணலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலின் தாக்கத்தால் வியர்வை,  நீரிழப்பு,  வேர்க்குரு,  அரிப்பு,  தேமல்,   அம்மை,  வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும்.  கோடை காலத்தில்  குழந்தைகள்,  கர்ப்பிணிகள்,  முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடைகாலத்தில் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி இங்கு காணலாம்.

  • சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முதலில் க்ளென்சிங், டோனிங், மாய்சரைசிங் என்ற முறையை பின்பற்றவும்.  அதாவது உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சர் கொண்டு உங்கள் சருமத்தை முதலில் சுத்தப்படுத்தி கொள்ளவும்.  பின்னர் டோனர் கொண்டு ஈரப்பதம் செய்துவிட்டு இறுதியாக மாய்சரைஸர் பயன்படுத்தவும்.
  • தினமும் கிளிசரின் கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம்.  கிளிசரின் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்து, நாள் முழுவதும் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
  • கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை சுத்தம் செய்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யுங்கள்.  இது சூரிய ஒளியால் சருமத்தில் உண்டாகும் கருமையை நீக்க உதவும். மேலும் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும்.  கற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட,  இயற்கையான கற்றாலையை பயன்படுத்துவது நல்லது.
  • புற ஊதா கதிர்களிலிருந்து உதடுகளை பாதுகாக்க SPF 15 அல்லது அதற்கு மேல் உள்ள லிப் பாமை உதட்டில் தடவுவது நல்லது.
  • தர்பூசணிகள், வெள்ளரிக்காய், கேரட் போன்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
  • தேங்காய் எண்ணெய் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் குளிப்பதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு சருமத்தில் மசாஜ் செய்து வருவது நல்லது.
  • கோடை காலத்தில் நீரேற்றமாக இருப்பது நல்லது.  இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் அவசியம்.  அதிகளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
  • அதிகப்படியான காஃபின் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
  • நாம் தினமும் பயன்படுத்தும் துண்டு மென்மையாக, சுத்தமான காட்டனாக இருக்க வேண்டும்.  கனமான துண்டு பயன்படுத்தி சருமத்தை துடைத்தால் கடினமாக மாறி விடும்.  லேசான துண்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவும்.
  • கோடை காலத்தில் சருமத்தில் அதிக அழுக்கு மற்றும் எண்ணெய் படிந்திருக்கும்.  இதனால் சரும துளைகள் மூடி சரும பிரச்னைகள் உண்டாகும்.  இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்கலாம்.

  • வாசனை திரவிய சோப்புகள் சருமத்தை எரிச்சலடையச் செய்து வறட்சியை ஏற்படுத்தும்.  அதற்கு பதிலாக, இயற்கை சோப்புகள் அல்லது குளியல் ஜெல்களை பயன்படுத்தலாம்.  இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
  • வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.  ஏனெனில் இது புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல்,  சருமம் வறண்டு போவதையும் தடுக்கிறது.  சருமத்தின் வகைக்கு ஏற்ப சன்ஸ்கிரீனை வாங்குவது நல்லது.
  • ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் சருமம் பொலிவாகும்.  இதற்கு பழங்கள், பயத்த மாவு, நலங்கு மாவு,  தயிர், மஞ்சள் தூள், தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Tags :
Advertisement