Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்தியாவிற்குள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் நுழைவது எப்படி?” - யூடியூபரின் செயல் ஒரு ஆண்டிற்கு பின் அம்பலம்!

08:50 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

சட்டவிரோதமாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது எப்படி என்பதை வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

Advertisement

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக இந்தியாவிற்குள் தினசரி சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவதை அறிந்திருந்தாலும், இந்த தீவிரமான பிரச்னைக்கு எதிராக இந்திய அரசாங்கம் இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுப்பப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த யூடியூபர் தான் அதற்கு முக்கிய காரணம். அவர் வெளியிட்டுள்ள வீடியோ இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. யூடியூபர் டிஹெச் டிராவலிங் இன்ஃபோ, பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் எப்படி நுழைவது என்பது குறித்த 21 நிமிட வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர் எப்படி எல்லையை வெற்றிகரமாக கடந்து சிலருடன் இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பதை செய்து காட்டினார். அந்த வீடியோவில், அவர் வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஜம்காவ் கரோ கிராமத்தின் எல்லையான வங்கதேசப் பகுதியை நோக்கிச் செல்கிறார். பிறகு அங்கிருந்து மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை எளிதில் அணுகலாம் என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து இறுதி எல்லையை அடைந்த அவர் அங்கு, “வங்காளதேசத்தின் கடைசி எல்லை - சர்வதேச எல்லை. கடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்ட பலகையை காட்டினார். அந்த இடத்தில், அவர் இந்தியா மற்றும் வங்கதேசத்தை இருபுறமும் காட்டும் மைல்கல்லைக் காட்டுகிறார். அந்த எல்லையில் வேலி அல்லது அது போன்ற எதுவும் இல்லை. பின்னர் அவர் இந்திய நிலம் என்று அழைக்கும் இடத்திற்கு தொடர்ந்து நடந்து செல்கிறார்.

தூரத்தில், வேலியைக் காட்டுகிறார். அவரும் அவரது நண்பர்கள் குழுவும் வேலியை நோக்கி செல்கின்றனர். பிறகு அவர், “இந்த பைப்லைன்கள் வழியாக மக்கள் நுழைய முடியும். இது இந்தியாவிற்கு நேரடியான பாதை” என்று கூறுகிறார். அப்போது அங்கு ஒரு படகுக்காரர் வருகிறார். அதில் மேகாலயா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யூடியூபர் இந்தியாவிற்குள் நுழையாவிட்டாலும், இறுதியில், அவர் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் நுழைய வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற செயல்கள் ஆபத்தானது என்று அவர் எச்சரித்தார். இருப்பினும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது பற்றிய வீடியோ சர்சைக்குரியது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமீப காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும், இருப்பினும் உரிய அனுமதி இல்லாமல் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்குள் நுழைவது தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Tags :
assamBangladeshIllegal EntryNews7Tamilnews7TamilUpdatesPassportViralvisaWest bengalyoutuber
Advertisement
Next Article