தலையில் எவ்வளவு முடி இருக்கும்? வினோத முயற்சியில் ஈடுபட்ட நபர்... வீடியோ வைரல்!
தற்போதைய காலத்தில் செல்போனை பயன்படுத்தாதவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவ்வாறு பயன்டுத்துபவர்கள் ரீல்ஸ், விலாக் போன்றவற்றில் மூழ்கியுள்ளனர். பலரும் லைக்கிற்காக ரீல்ஸ், காமெடி செய்வதில் தொடங்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் கூட ஈடுபடுகின்றனர்.
அந்த வகையின்தான் இளைஞர் ஒருவர் வித்தியாசமான செயல்முறையில் ஈடுபட்டு டிரெண்டாகி வருகிறார்.
அந்த இளைஞர் தனது தலையில் உள்ள முடியை எண்ண முடிவு செய்தார். அதற்காக அவர் எடுத்த முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்த இளைஞர் தலையில் உள்ள முடிகளை எண்ணுவதற்காக தலையை மொட்டை அடித்தார். பின்னர் அவர் அந்த முடிகளை எண்ண தொடங்குகினார். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஒரு கூடையில் கல்லை போட்டுக்கொண்டே வந்தார். முடியை எண்ணுவதற்காக அவர் ஒவ்வொரு நாளும் 10 -12 மணிநேரங்களை செலவிட்டதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு, அவரது தலையில் 91,300 முடிகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக அந்த நபர் லிம்கா சாதனை புத்தகம் மற்றும் கின்னஸ் உலக சாதனைகளுக்கும் விண்ணப்பித்தார், ஆனால் அது பலனளிக்கவில்லை. இதுதொடர்பாக வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்தார். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். "உங்கள் எண்ணிக்கை துல்லியமாக இருந்தது என்று எப்படி நம்புவது" என்று ஒரு பயனர் கேட்டார். மற்றவர்கள் "வேலையின்மை உச்சத்தில் உள்ளது" என்று கிண்டல் செய்யும் வகையில் தெரிவித்தனர். "அல்ட்ரா வேலையில்லாத ப்ரோ மேக்ஸ்," என்று மற்றொரு பயனர் கேலி செய்தார். இந்த வீடியோ 15 மில்லியன் பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.