ஒரு கிலோ மாம்பழத்தின் விலை இவ்வளவா? - லண்டனில் இந்திய பொருட்களின் விலை குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ!
லண்டனில் அல்போன்சா மாம்பழம் ரூ. 2,400க்கு விற்பனை செய்யப்படுவதாக டெல்லியை சார்ந்த பெண் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்தார்.
டெல்லியைச் சேர்ந்த சாவி அகர்வால் என்பவர் லண்டனுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு மாலில் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் விலையை கண்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், லண்டனில் விற்பனை செய்யப்பட்ட மளிகைப் பொருட்களின் விலையை இந்தியாவில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விலையோடு ஒப்பீடு செய்துள்ளார். இதையடுத்து, அதனை வீடியோ பதிவாக செய்து தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது விலை அதிகளவில் வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!
இந்தியாவில் ரூ.20 விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களான லேஸ் மற்றும் லிட்டில் ஹார்ட் பிஸ்கட்கள் லண்டனில் ரூ. 95க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல, மேகி நூடுல்ஸின் விலை ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 6 அல்போன்சா மாம்பழங்களின் விலை ரூ.2400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாகற்காய் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனீர் ரூ.700க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.650க்கு விற்பனை செய்யப்படுகிறது என அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.