For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் காம்போ எப்படி..? ”மதராஸி” திரை விமர்சனம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள  இந்த மதராஸி. சிவாகார்த்திகேயனுக்கு அடுத்த வெற்றியாக அமைந்ததா? விமர்சனம் இதோ.
05:26 PM Sep 05, 2025 IST | Web Editor
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள  இந்த மதராஸி. சிவாகார்த்திகேயனுக்கு அடுத்த வெற்றியாக அமைந்ததா? விமர்சனம் இதோ.
சிவகார்த்திகேயன்  முருகதாஸ் காம்போ எப்படி    ”மதராஸி” திரை விமர்சனம்
Advertisement

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் காம்போவில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள  இந்த மதராஸி. சிவாகார்த்திகேயனுக்கு அடுத்த வெற்றியாக அமைந்ததா? விமர்சனம் இதோ.

Advertisement

மதராஸி கதைகளம்

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்ககூடாது. நாம் துப்பாக்கி பிஸினஸ் பண்ணுவோம். அதன்மூலம் பணம் பண்ணுவோம் என்ற வெறியுடன், நார்த் இண்டியாவில் இருந்து நாலைந்து கன்டெயினரில் துப்பாக்கிகளை நிரப்பிக்கொண்டு சென்னைக்கு வருகிறார்கள் வில்லன்கள் வித்யூத் ஜாம்வால் மற்றும் டான்சிங் ரோஸ் ஷபீர். அந்த திட்டடத்தை முறியடிக்க நினைக்கிறது தேசிய பாதுகாப்பு முகமை என்ற என்ஐஏ. ஆனால், அவர்கள் திட்டம் தோல்வி அடைகிறது. ஒரு கேஸ் பேக்டரியில் கன்டெயினரை நிறுத்திவிட்டு, துப்பாக்கிகளை வினியோகம் செய்ய வில்லன் டீம் பிளான் போடுகிறது. அப்போது காதல் தோல்வியால் நான் சாகப்போகிறேன் என்று சுற்றி திரியும் சிவகார்த்திகேயனை தங்கள் ஆபரேசனுக்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்ஐஏ அதிகாரி பிஜூமேனன். சிவகார்த்திகேயன் த னது பணியை சிறப்பாக செய்தாரா? வில்லன் டீமால் கடத்தப்பட்டட தனது காதலி ருக்மிணிவசந்த்தை மீட்டாரா? என்பது மதராஸி படத்தின் கதை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்

பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். எங்கே தவறு நடந்தாலும், அதை தட்டிக்கேட்கிறார். பாதிக்கப்பட்டவர்களை தனது உறவினர்களாக நினைத்து ஓடோடி உதவுகிறார். காரணம், அவர் குடும்பம் ஒரு விபத்தில் பலி ஆகிறது. அந்த பாதிப்பால், அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட, அதனால் என்ன செய்கிறார். எந்த சமயத்தில் எப்படி மாறுகிறார் என்ற மாறுபட்ட கேரக்டரில் நடித்து இருக்கிறார். காதலி ருக்மணியை பிரிந்த சோகத்தில் தற்கொலை முயற்சிப்பவராக, அப்பாவியாக அறிமுகம் ஆனாலும், ஒரு கட்டத்தி்ற்குமேல் ஆக் சன் காட்சிகளில் அதிரடி செய்கிறார். குறிப்பாக, இடைவேளை சண்டைகாட்சி, கிளைமாக்ஸ் சண்டைகாட்சி, என்ஐஏ அலுவல தாக்குதல், அதை தொடர்ந்து நடக்கும் சண்டைகாட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆக்சன் கதை என்பதால் அவருக்கு காமெடி, காதல் காட்சிகள் அதிகம் இல்லை. அது, கொஞ்சம் ஏமாற்றம்தான். சண்டைகாட்சிகளில் திலீப்சுப்பராயன், கெவின் உழைப்பு அபாரம்.

பல் டாக்டராக வருகிறார் ருக்மணிவசந்த். அவர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் கியூட். ஆனாலும், முழுமையாக அவர் திறமையை பயன்படுத்தவில்லை. வில்லன்களாக வரும் வித்யூத் ஜாம்வால், ஷபீர் சிறப்பாக நடித்து, ஆக் சன் காட்சிகளில் ஸ்கோர் செய்தார்கள். குறிப்பாக, ஹீரோவுக்கு இணையாக பைட் சீன்களில், சேசிங்களில் கலக்கி இருக்கிறார். ஷபீரும் துப்பாக்கி கடத்தல் சம்பந்தப்பட்ட காட்சிகளில், பழிவாங்கும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். சில சமயங்களில் ஹீரோவை விட வில்லன்களுக்கு அதிக ஸ்கோப், பில்டப் சீன் கொடுத்து ரசித்து இருக்கிறார் முருகதாஸ். என்.ஐ.ஏ அதிகாரியாக வரும் பிஜூமேனன் அலட்டாமல் அருமையாக நடித்து இருக்கிறார்.

காதல் படமாக தொடங்கி, ஆக்சன் கதைக்கு படம் மாறுகிறது. நடுவில் சிவகார்த்திகேயன் குடும்பம் சம்பந்தப்பட்ட எமோசனலும் இருக்கிறது. வில்லனுக்கு சவால் விடும் ஹீரோவின் இடைவேளை போர்சன், அதற்கு முந்தைய காட்சிகள், என் ஐ ஏ ஆபீஸ் அட்டாக் சீன், துறைமுகத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் ஆகியவை படத்தின் பிளஸ் பாயின்ட். சுதீப் கேமரா வொர்க் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. இரண்டு பாடல்கள், பின்னணி இசையில் அனிருத்தும் கடுமையாக உழைத்து இருக்கிறார். ஆனாலும் பாடல்காட்சிகளில், பாடல்களில் கலர்புல், கமர்ஷியல் விஷயங்கள் குறைவு. சிவாவின் மற்றபடங்கள், முருகதாசின் முந்தைய ஹிட் படங்களை நினைத்துக்கொண்டே படம் பார்த்தால் மதராஸி வேறுஉணர்வை தரும்.

பொதுவாக சிவகார்த்திகேயன் படங்களில் காமெடி நன்றாக இருக்கும். சில காமெடியன்கள் இருப்பார்கள். அவரே காமெடியும் பண்ணுவார். அதெல்லாம் மதராஸியில் மிஸ்சிங். அடுத்தபடியாக பாடல்களிலும் திருப்தி இல்லை. சலம்பல பாடல் ஓகே ரகம். ஆனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விரும்புகிற மாதிரியான கலர்புல் பாடல்கள், பில்டப் வசனங்கள் படத்தில் அதிகம் இல்லை. சண்டைகாட்சியிலும் அவர் அடிக்கடி அடிவாங்குவதை ரசிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய சதிதிட்டத்தை இவ்வளவு குறைவான என் ஐ ஏ அதிகாரிகள் தடுக்க முடியுமா? போலீஸ் என்ன செய்கிறது. இன்றைய டெக்னாலஜியில் இப்படியெல்லாம் துப்பாக்கி கடத்த முடியுமா? என் ஐ ஏ ஆபீசை தாக்க முடியுமா? எனஏகப்பட்ட கேள்விகள், பல லாஜிக் மிஸ்டேக். இதை அனைத்தையும் சிவகார்த்திகே யன் என்ற ஒரே ஒருவர் சண்டைபோட்டு சமாளித்து, ரசிகர்களை கவர்கிறார்.

இது பக்கா முருகதாஸ் படம், சிவகார்த்திகேயனை அவர் ஆக்சனுக்கு மாற்றி நடிக்க வைத்து இருக்கிறார். துப்பாக்கி கடத்தலை தடுக்கும் கதை, துப்பாக்கி இயக்குனர் இயக்க, விஜயிடம் துப்பாக்கி வாங்கிய சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். ஆக்சன் பிரியர்களுக்கு, எஸ்.கே. ரசிகர்களுக்கு மதராஸி பிடிக்கும்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம்

Tags :
Advertisement