மனைவியைக் கைவிட்ட மோடியை ராமர் கோயில் பூஜையில் எப்படி அனுமதிக்க முடியும்? - சுப்பிரமணியன் சுவாமி கேள்வி!
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பூஜைகளில் மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி அனுமதிக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
' ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டவர். அப்படிப்பட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம்' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘பெரியண்ணா’ விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்!
ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் பூஜையில், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்க மாட்டார் என அக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது. 'மத வழிபாடுகள் என்பது தனி மனிதனின் விருப்பம், அதை அரசியல் பலன்களுக்குக் கருவியாக பயன்படுத்துவது முறையற்றது.' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.