For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூடுபிடிக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு | நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலை...!

07:41 AM Jan 16, 2024 IST | Web Editor
சூடுபிடிக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு   நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலை
Advertisement

மிகவும் பிரசித்திப்பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிகட்டு போட்டி நியூஸ்7 தமிழி தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்று வட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

சூரியூர் பெரிய குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளாக விழாமேடை மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், காலை 8மணி அளவில் துவங்கும் இந்த ஜல்லிகட்டு போட்டியில் சுமார் 700க்கும் அதிகமான காளைகள் கலந்து கொள்ள உள்ளது. சுமார் 400க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைக்க உள்ளார். இந்த பிரசித்திபெற்ற பெரிய சூரியூர் ஜல்லிகட்டு போட்டி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

Advertisement