ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு!
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கடந்து சென்ற ஒற்றை யானையை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நேற்று மாலை சானமாவு, போடுர் பள்ளம்
பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை பேரண்டபள்ளி வனப்பகுதியிலிருந்து
ஒரு புறத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்லவதற்காக சாலையோரம் நின்றிருந்தது. இந்நிலையில், சாலையோரம் நின்றிருந்த யானையை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து, வாகனம் நின்றதை கண்ட அந்த யானை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை சாதாரணமாக சாலையின் மறுப்பகுதிக்கு கடந்து சென்றது. இதனைப் பார்த்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தகவல் அறிந்த வனத்துறையினர் காமன் தொட்டி, காணலட்டி, நல்லகானகொத்தப்பள்ளி, செட்டிப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே சமயம் யானை நடமாட்டத்தை கண்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பொதுமக்களிடம் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.