“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” - என்.ஆர்.இளங்கோ பேட்டி!
30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்... நிச்சயம்
பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்த வழக்கில் நாங்கள் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அந்த மேல் முறையிட்டுடில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்.
30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். திமுக பலமாக இருக்கிறது அதைக் கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் மேல்முறையீடு என ஒன்று இருக்கிறது. 2024 இல் பாஜகவினரின் ஊழல் பட்டியல் வெளிவரும்.
இவ்வாறு மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.