Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
12:58 PM Feb 26, 2025 IST | Web Editor
Advertisement

கோவைக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு (பிப்.25 ) வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை திறந்து வைத்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம், திருவண்ணாமலையில் உள்ள பாஜக அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் மத்திய அமைசர் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக "கோ பேக் அமித்ஷா" வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, கறுப்புக் கொடி காட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
amit shahBJPbjp officecentral ministerCoimbatoreinauguratedTamilNadu
Advertisement
Next Article