Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

01:48 PM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இரவு பெரிய அளவில் மழை பெய்யாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

சென்னை தரமணியில் உள்ள ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் ஸ்டாட் அப் சென்னை - செய்க புதுமை எனும் ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில், அவருடன் அமைச்சர் தா.மோ அன்பரசன், ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :

" ஸ்டாட் அப் தமிழ்நாடு நடத்தும் ஸ்டாட் அப் சென்னை - செய்க புதுமை நிகழ்ச்சியில்
பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். பெரியார் பெயரில் ஒரு திட்டம், மாணவர்களுக்கு
ஒரு திட்டம், என தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் வழியில் தொழில்துறையில் புதிய முயற்சிகளை திமுக அரசு முன்னெடுத்து வருகிறது. சென்னை எப்போதும் புதுமையை செய்யும். அல்லது புதுமையை வரவேற்கும்.

தொழில் வளம் பெருகினால் தான் வேலைவாய்ப்பு பெருகும். மதுரை, ஈரோடு, திருநெல்வேலியில் கடந்த ஆண்டு ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கான விழா அமைத்தோம். 2300ல் இருந்து 9600 ஸ்டாட் அப் ஆக உயர்த்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சில மாவட்டங்களில் கூடுதலாக ஸ்டாட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும்
என்று இலக்கை வைத்துள்ளார். இதற்கு ஸ்டாட் அப் நிறுவனங்களின் பங்கும் முக்கியமானது. நமது முதலமைச்சர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்று நினைத்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

இளைஞர்கள் பெண்கள் புதிய தொழில் ஐடியாக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள்
எந்த தொழில் தொடங்க விரும்பினாலும் அதற்கு பயிற்சியும் பொருளாதார உதவியும்
அரசு வழங்கி வருகிறது. இந்த விழா வெற்றி பெற எனது அன்புகளையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படியுங்கள் : ஆட்சி குறித்த விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் – முதலமைச்சர் #MKStalin

இதையடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"இலவச இங்க்பேஷன் அமைக்க 25 கல்வி நிறுவனங்களுக்கு தலா 7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு மட்டுமின்றி உள்நாட்டிலும் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்று நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.” என தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் குழப்பம் இருப்பதாக கல்வியாளர்கள் சொல்கிறார்களே என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்..

” மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் தானே. நேற்று மாலை மழை வரும் என்று சொன்னார்கள். ஆனால் பெரிய அளவில் மழை வரவில்லை. அதன் பின்னர் நள்ளிரவு மழை வந்ததால் தான் விடுமுறை அறிவிப்பு சற்று தாமதமாக வந்தது.

மெட்ரோ பணிகள் நடைபெறக்கூடிய இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் மெட்ரோ
நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க பேசி வருகிறோம்.கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றது. மற்ற தொகுதிகளிலும் தொடங்க முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் “ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
ChennaiCMOTamilNaduDeputy Chief Ministerheavy rainsHolidaysMKStalinnews7TamilUpdatesSchoolsUdhayanidhi stalin
Advertisement
Next Article