For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

03:58 PM Dec 02, 2023 IST | Jeni
சென்னை  திருவள்ளூர்  செங்கல்பட்டு  காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச 4ம் தேதி பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிச.4 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும்,  நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி டிச.4ம் தேதி  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவாட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

5 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பொன்னேரி மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 50 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் புயலை எதிர்கொள்ள 400 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதே போல்,  செங்கல்பட்டு மாவட்டத்திலும், டிசம்பர் 4-ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் டிசம்பர் 4-ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement