Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் : ஹாக்கியில் இரட்டை தங்கம் வென்ற நெதர்லாந்து அணி!

10:36 AM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

ஒலிம்பிக் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் நாடு என்ற சிறப்பை நெதர்லாந்து பெற்றுள்ளது.

Advertisement

பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹாக்கியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ஆடவர் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வழக்கமான ஆட்ட நேரத்தில் 1-1 என டிரா ஆன நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. மூன்றாவது முறையாக ஆடவர் பிரிவில் நெதர்லாந்து தங்கம் வென்றது.

இதற்கிடையே மகளிர் இறுதி ஆட்டத்தில் சீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆடவர் பிரிவைப் போலவே வழக்கமான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என வென்றது நெதர்லாந்து. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஆடவர், மகளிர் என இரட்டை தங்கம் வென்ற முதல் நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது நெதர்லாந்து.

இதையும் படியுங்கள் : வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

மகளிர் பீச் வாலிபால் போட்டியில் பிரேஸில் அணி கடும் போராட்டத்துக்கு பின் 3 செட் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது. முதல் செட்டை கடும் சவாலுக்குபின் பிரேஸில் 26-24 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் கனடா முழு ஆதிக்கம் செலுத்தி 21-12 என வசப்படுத்தியது. மூன்றாவது செட் டைபிரேக்கர் வரை சென்ற நிலையில், பிரேஸில் 2-1 என கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

Tags :
double goldfirst teamhockeynetherlandswin
Advertisement
Next Article