வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி!
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்திரப்பிரதேச வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வாராணசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முஸ்லீம்கள் தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மசூதி இந்துக்களின் கோயிலை இடித்துதான் கட்டப்பட்டதா என்பதை அறிய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 55 இந்து தெய்வ சிலைகள், தூண்கள் இருந்ததாக அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு வாராணசி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழிபாடு நடத்துவதற்கான அர்ச்சகரை நியமிக்கவும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்து தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அடுத்த 7 நாள்களுக்குள் வழிபாடு நடத்தப்படும் எனவும்
நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.