Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை - காரணம் என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்!

11:08 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை அருகே இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பிரமுகரின் மனைவியை அபகரித்ததோடு,  சொத்துகளையும் அபகரிக்க முயன்றதால் பழி தீர்த்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி. இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவராக இருந்து வந்தார். நேற்று (மே 22) மாலை பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி வந்த மர்ம நபர் ராஜாஜியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த ராஜாஜியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் குறித்து மேற்கொண்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கோபால் மற்றும் சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார், “காங்கிரஸ் பிரமுகரான கோபாலின் மனைவி கௌரி கடந்த சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்தார். ராஜாஜி கௌரியை தனது மனைவி என சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கௌரி இறந்து போனார். அந்த நேரத்தில், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கௌரியை தனது மனைவி என்று, அவரது பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து போஸ்டர்கள் ஒட்டி சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை ராஜாஜி வெளியிட்டுள்ளார்.

இது கோபாலுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது. மேலும், கோபால் சம்பாதித்த சொத்துக்களில் பாதி கௌரியின் பெயரில் இருப்பதால் அந்த சொத்து சம்பந்தமான பிரச்னையும் கடந்த சில வாரங்களாக ராஜாஜிக்கும், கோபாலுக்கும் இடையே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ராஜாஜியின் தம்பி கண்ணன் என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இதனிடையே, கண்ணனுடன் சேர்ந்து கிருஷ்ணகுமார் மது அருந்திய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணகுமார் கல்லை தூக்கி கண்ணன் காலில் போட்டதில் அவர் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.  எனவே, கிருஷ்ணகுமார் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட கோபால், ‘காலை உடைத்து விட்டதால் ராஜாஜியும், கண்ணனும் சேர்ந்து உன்னை (கிருஷ்ணகுமார்) கொன்று விடுவார்கள், அதற்குள் நீ முந்திக்கொள் நான் பார்த்து கொள்கிறேன்’ என கோபால் கூறியதாக கூறப்படுகிறது.

தனது மனைவியை ராஜாஜி அபகரித்து கொண்டதும், அவர் பெயரில் இருந்த சொத்துக்களை ராஜாஜி அபகரிக்க முயன்றதுமே காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் ராஜாஜியை கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு கூறினர்.

Tags :
ChennaiCongressCrimeNews7Tamilnews7TamilUpdatesPoonamalleeRajaji
Advertisement
Next Article