Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எல்ஐசி முகப்பு பக்கத்தில் இந்தி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

03:04 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

எல்ஐசி நிறுவனத்தின் வலைதளப் பக்கம் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வலைதளப் பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை அதன் இணையதள வலைதளப் பக்கம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கியது. மேலும் மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும், ஹிந்தி மொழியில் இருந்ததால் மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது. 

மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு, மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

https://twitter.com/mkstalin/status/1858787413776105529

இதனிடையே எல்ஐசியின் இணையதள முகப்புப் பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

இந்தி திணிப்பின் பிரச்சார கருவியாக எல்ஐசி இணையதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை தேர்வு செய்யும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது கலாச்சாரமும், மொழியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் வளர்ந்த LIC, எந்த தைரியத்தில் இப்படி பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை திரும்ப பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
CHIEF MINISTERhindiLICMK Stalin
Advertisement
Next Article