For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழி அல்ல... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

05:00 PM Dec 14, 2023 IST | Web Editor
இந்தி அலுவல் மொழியே தவிர  தேசிய மொழி அல்ல    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்க வேண்டும் என்று பாதுகாப்பு படை வீரர் பாடம் எடுத்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். "நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், "தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்” என்று உரத்தக்குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.  “தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement