Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் - இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!

01:33 PM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

டெஹ்ரா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பிப்ரவரி 27 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களான சிங் (டெஹ்ரா), சர்மா (ஹமிர்பூர்) மற்றும் கே.எல். தாக்கூர் (நலகர்) ஆகியோர் மார்ச் மாதம் தங்களது பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர். இவர்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு, மூன்று தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதையும் படியுங்கள் : பஞ்சாப் இடைத்தேர்தல் - ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி!

இதையடுத்து மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். பாஜகவில் இணைந்த மூன்று முன்னாள் எம்எல்ஏக்களும் அந்தந்த தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் டெஹ்ரா தொகுதியில் இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர், ஹமிர்பூரில் புஷ்பிந்தர் வர்மா மற்றும் நலகரில் தொகுதியில் ஐந்து முறை இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்சங்க தலைவரான ஹர்தீப் சிங் பாபா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நடைபெற்ற 3 தொகுதி இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் 2இடங்கள் மற்றும் பாஜக ஒரு இடம் என முன்னிலையில் உள்ளது. டெஹ்ரா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். 32737 வாக்குகள் பெற்ற அவர்  9399 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹோஷ்யர் சிங் 23,338 வாக்குகள் பெற்ற தோல்வியடைந்தார்.

Tags :
BiharElectionResultsHimachalpradeshMadyapradeshPunjabTamilNaduvikravandiVikravandiByElectionWestBengal
Advertisement
Next Article