Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது: சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

03:54 PM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கில்  சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.  இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி கடந்த டிசம்பர் 12ஆம்  தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது.  இருப்பினும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அங்கித் திவாரியை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யபட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர்  சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அரசின் அதிகாரிகள் இது போன்ற தவறு செய்யும் போது அதனை விசாரணை செய்வதற்கு மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட நபரின் அலுவலகம் வீடுகளில் சோதனை இடுவதற்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது  எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்தனர்.

Tags :
Ankit TiwariEnforcement DirecorateEnforcement Directorate (ED)High courtMadurai
Advertisement
Next Article